ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்! - இளைஞர்கள் கைது

கடலூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

இளைஞர்கள் போராட்டம்
author img

By

Published : Jun 16, 2019, 9:08 PM IST

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மே 10ஆம் தேதி மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனடிப்படையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மூன்று வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

கடலூர் மாவட்ட இளைஞர்கள்

இதனால், வளம் செழிக்கும் காவிரி மண்ணின் நீர்வளம் பாதிக்கப்படும் என்ற அச்சம் டெல்டா பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திடீரென்று மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கடலூரில் அண்ணாபாலம் அருகே இளைஞர்கள் 15 பேர் பதாகை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் செய்த இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து இழுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம்

கடலூர்
ஜூன் 16,

கடலூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டடுள்ளது. 

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க  3 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டம் தியாகவல்லி முதல் நாகை மாவட்டம் சீர்காழி வரையில் உள்ள 731 சதுர கிலோமீட்டர் தரைப் பகுதி வட்டாரம் வரையிலும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கடலூர் வரையும் 1794 சதுர கி.மீ. வரையிலும்

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரையில் 2674 சதுர கி.மீ. நிலப்பகுதி வட்டாரத்திலும் என ஆக மொத்தம் மூன்று  வட்டாரங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு நடத்த வேதாந்தா குழுமத்திற்கும் மத்திய அரசு உரிமம் வழங்கி இருக்கிறது.

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் கட்சியினர் போராடி வருகின்றனர். 

போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக போலீசார் அனைவரின் மீதும் வழக்குப் பதிந்து வருகின்றனர் இந்நிலையில் திடீரென்று மத்திய அரசு கொண்டு வரும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கடலூரில் அண்ணாபாலம் அருகே கடலூர் இளைஞர்கள் 15 பேர் கையில் பதாகை ஏந்தியபடி திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் 

அவர்களை போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது 

 ஹைட்ரோ கார்பன் எதிராக போராடுபவர்களுக்கு அனுமதி மறுத்து அவர்கள் மீது போலீசார் தொடர்ந்து வழக்குகளை பதிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Video send ftp
File name: TN_CDL_02_16_HYDRO_CARBON_PROTEST_7204906
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.