ETV Bharat / state

மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை! - கடலூரில் மூதாட்டி கொலை

கடலூர்: பண்ருட்டி அருகே மூதாட்டி ஒருவரைக் கொன்று, நான்கு சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

Old lady murdered in Cuddalore
Old lady murdered in Cuddalore
author img

By

Published : Jun 8, 2020, 1:45 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனாம்பாள் (86). இவர் கணவனை இழந்து வீட்டில் தனியாக வசித்துவருகிறார்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மூதாட்டியைக் கொன்று, அவர் அணிந்திருந்த வளையல், செயின் உள்ளிட்ட நான்கு சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையர்களுடன் மூதாட்டி போராடியதால் அவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து, முத்தாண்டிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி வெட்டிக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.