பண்ருட்டி அருகேயுள்ள பாப்பன் கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். சொரத்தூர் மெயின் ரோட்டில் இவர் ஹாலோ பிளாக் கம்பெனி நடித்து வருகிறார். இக்கூரைக் கொட்டகை கம்பெனியில் இரவு நேரத்தில் ராஜேந்திரன் மகன் ராஜதுரை (33) தங்குவது வழக்கம்.
அதன்படி நேற்று இரவும் அவர் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், அங்கு நள்ளிரவில் வந்த மர்ம கும்பல், தங்கள் கையில் இருந்த உருட்டுகட்டையைத் கொண்டு சொரத்தூர் மெயின் ரோட்டில் உள்ள கடைகளை சூறையாடியனர்.
அதன்பின் ராஜதுரை தூங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு தீ வைத்தனர். இதில் ராஜதுரை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த முத்தாண்டிகுப்பம் காவல் ஆய்வாளர் மலர்விழி, துணை காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் பஞ்சாயத்து தேர்தல் முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
பண்ருட்டி அருகில் உள்ள நடுகுப்பம் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் நடுகுப்பத்தைச் சேர்ந்த சக்திவேல் வெற்றி பெற்றார். சொரந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் தோல்வியடைந்தார். இதனால் பெருமாள் ஆதாரவாளர்கள் ஆத்திரத்தில் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நியூசிலாந்தை பாதித்த ஆஸ்திரேலிய காட்டுத்தீ - அச்சத்தில் மக்கள்