கடலூர் மாவட்டம், ராமாபுரம் ஊராட்சியில் குடிமராமத்து ஏரி தூர்வாரும் பணியை, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தொடக்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாடு அரசு 110 விதியின் கீழ் கடலூர் மாவட்ட ஊரக பகுதியில் உள்ள சிறு, குறு, ஏரிகள், குளங்களை குடிமராமத்து பணியின் மூலம் 80 ஏரிகள், குளங்கள், 1343 சிறு குளங்கள் கண்டறியப்பட்டு அதை தூர்வார 17 கோடி 63 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 80 குளங்கள் கண்டறியப்பட்டு, ஒரு குளத்திற்கு 5 லட்சம் என நிதி ஒதுக்கி, தற்போது ராமாபுரம் ஊராட்சியில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் 1343 சிறு குளங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. காவிரி ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வீராணம் ஏரியில் கூடுதலாக நீர் சேமிப்பது தொடர்பாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு நாட்களுக்குள் முடிவு தெரிவிக்கப்படும்' என கூறினார்.