ETV Bharat / state

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறிவருகிறது - வேல்முருகன் வேதனை

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறிவருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வேதனை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 13, 2023, 11:29 AM IST

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறிவருகிறது - வேல்முருகன் வேதனை

சென்னை: தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது எனவும் வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது எனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் வியாழன் அன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "சேது சமுத்திர திட்டம் என்பது 150 ஆண்டுக்காலம் கனவுத் திட்டம். இந்தியா தமிழகம் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயன் உள்ளதாக இருக்கும். சேது சமுத்திரம் திட்டத்தில் மணலை அள்ளும் போது மண் சரிவு ஏற்படும் என்று சொல்கிறார் மேலும் அங்குப் பவளப் பாறைகளுக்குப் பாதிப்பு இல்லாமல் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். பல்லாயிரம் கோடி செலவு ஆகும் சேது சமுத்திரம் திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

சேது சமுத்திரம் திட்டம் தொடங்கும் இடத்தில் ராமர் பாலம் இருக்கிறது என்று சொன்ன பாஜக, இப்போது ராமர் பாலம் இல்லை என்று அறிவித்துள்ளனர். இது தமிழகத்திற்கும் திமுகவிற்கும் கிடைத்த வெற்றி. நெய்வேலி என்.எல்.சிக்கு.நிலம் கொடுத்தவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டு நிலம் கையகப்படுத்த வேண்டும்.

வட மாநிலத்தவர்களால் தமிழகத்தில் கொலை நடக்கிறது.தமிழ்நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும் வடமாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் வட மாநிலத்தவர்களுக்குப் பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு வட இந்தியர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது.இந்த அபாயத்தைத் தடுக்க வேண்டும். தமிழக அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலித் தொழிலாளிகளை எதிர்க்கவில்லை வற்புறுத்தித் திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களைத் தான் எதிர்க்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: ஆளுநரை 'போயா' என்றது மாபெரும் தவறு.. அமைச்சர் பொன்முடிக்கு குஷ்பு கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.