ETV Bharat / state

‘2000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு’ - அமைச்சர் எம்.சி. சம்பத்

கடலூர்: ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், 2000 குடும்பங்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்குத் தேசையான நிவாரண பொருள்களை ஏற்பாடு செய்த அமைச்சர் எம்.சி.சம்பத்

author img

By

Published : May 13, 2020, 8:38 PM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலையில் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அரசு தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருகிறது. கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இன்று, கரோனா சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கும், அவர்களைச் சார்ந்த 2,000 குடும்பங்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறிகளை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கி, பயனாளிகளிடம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகளான செல்ஃபோன் சர்வீஸ் சென்டர், துணிக்கடைகள், இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடைகள், காய்கறி, மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் கூடும் மக்கள், கடை உரிமையாளர்கள் தகுந்த இடைவெளியை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் கடை உரிமையாளர்கள் தூய்மை பணிகள், கிருமிநாசினி தெளிப்பு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் உள்ள பொது சுகாதார வளாகங்களை தூய்மையாக வைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மேலும், பிற மாவட்டங்களிலிருந்து வந்தவர்களைக் கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சென்னைக்குச் சென்று வந்தவர்கள் பிற மாநிலங்களுக்கு பணி நிமித்தம் காரணமாக சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சத்தான உணவுகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சத்தான உணவுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு தேசையான நிவாரண பொருள்களை ஏற்பாடு செய்த அமைச்சர் எம்.சி. சம்பத்
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், கூடுதல் ஆட்சியர் ராஜகோபால்சுங்காரா, கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், இணை இயக்குனர் மருத்துவ பணிகள் ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதா, கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி, கடலூர் ஒன்றிய குழு தலைவர் தெய்வ பக்கிரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.