கடலூர் மாவட்டம், முதுநகர் அருகேயுள்ள பச்சையங்குப்பத்தைச் சேர்ந்தவர் வினிதா (23). இவரும் கூத்தப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திருவரசன் (27) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், காதலன் திருவரசனுக்கு வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். இதையறிந்த, வினிதா இது குறித்து அவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், மனமுடைந்த வினிதா கடந்த 10ஆம் தேதி யாருக்கும் தெரியாமல் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதையடுத்து, வினிதாவுக்கு கடந்த 15ஆம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் தான் எலி மருந்து சாப்பிட்டதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வினிதாவின் பெற்றோர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 15 ஆம் தேதி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கடலூர் முதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இத்தகவலை அறிந்த காதலன் திருவரசன் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த அவரது பெற்றோர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சாதிய வன்கொடுமை: சிறுவனை மலம் அள்ள வைத்த கொடூரம்!