உலகப் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், வடக்கு கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் சன்னதியில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். கோயிலின் புனிதப் பகுதியான ஆயிரங்கால் மண்டபத்தில் ஆன்மிக நிகழ்சிகள் தவிர மற்ற நிகழ்சிகள் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை.
இந்நிலையில், நேற்று சிவகாசி பட்டாசு தொழிலதிபர் இல்லத் திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்துள்ளது. இதற்காக ஆயிரங்கால் மண்டபத்தை மின் விளக்குள், மலர் தோரணங்கள் போன்றவை கொண்டு பிரமாண்டமாக அலங்கரித்தனர். மேலும், அலங்கரிக்கப்பட்ட பகுதிகளில் வெளி ஆட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோயிலின் புனிதப் பகுதியான ஆயிரங்கால் மண்டபத்தில் தற்பொழுது திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் அனுமதியளித்திருப்பது சிதம்பரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திருமணம் நடைபெற பெரும்தொகை கைமாறியிருக்கலாம் என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.