ETV Bharat / state

பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை!! - இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத்

கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் இந்தியாவின் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் ஐம்பொன் சிலை உருவாக்கியுள்ளனர்

பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை!!

author img

By

Published : Nov 28, 2022, 6:01 PM IST

கடலூர்: நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர் முன்னாள் முப்படை தளபதி பிபின்ராவத் தார். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகளையும் அவரது நினைவை போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் செயின் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் பவுண்டேஷன் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இது பற்றி முன்னாள் ராணுவ வீரர் பாபு கூறுகையில், முப்படை தளபதி ஜெனரல் பிபின்ராவத் அவர்களின் மறைவு மிகவும் துயரமானது. அவர் தமிழ்நாட்டில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் இராணுவ வீரர்கள், சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் ஃபவுண்டேஷன் இணைந்து அவருக்கான சிலை செய்ய முடிவு செய்தோம்.

இந்நிலையில் கும்பகோணத்தில் உள்ள ராமசாமி சிற்பக் கலைக்கூடத்தில் அதற்கான பணிகள் ஒரு ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. தற்போது 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை உருவாக்கும் பணிகள் முடிவடைந்தது. மேலும் உலகில் முதல் முறையாக ராணுவ வீரருக்கு உருவாக்கப்பட்ட சிலை இதுவே ஆகும். இதை நாங்கள் புதுடெல்லியில் ராணுவ தலைமையகத்தில் வைக்க அனுமதி கோரினோம். அதற்கான அனுமதி கடிதம் எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து வருகின்ற 1ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து ரயில் மார்க்கமாக புது டெல்லிக்கு கொண்டு சென்று டிசம்பர் 10ஆம் தேதி ராணுவ தலைமையகத்தில் வைக்க திட்டமிட்டுள்ளோம். இந்திய ராணுவ வீரர்களின் நினைவை போற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஐம்பொன் சிலையை உருவாக்கி உள்ளோம் என கூறினார். பிபின் ராவத் சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் செய்யப்பட்ட ஐம்பொன் சிலை!!

இதையும் படிங்க:விசேஷத்துக்கு லீவு கேட்டா அசிங்கமா பேசுறாங்க - டிராஃபிக் போலீஸின் குமுறல் ஆடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.