ETV Bharat / state

காதல் மனைவியிடம் கருத்து வேறுபாடு - பூச்சிமருந்து அருந்திய கணவர் - விவாகரத்து வழக்கு

பண்ருட்டியில் காதல் மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தொடர்ந்ததால், துக்கத்தில் கணவர் பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

husband committed suicide
பூச்சிமருந்து அருந்தி கணவர் தற்கொலை
author img

By

Published : Jan 24, 2022, 6:30 PM IST

கடலூர்: பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் மோகன்ராஜ். இவரும், பணிக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்த எஸ்டர் சந்தியா என்பவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர்.

பின்பு இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மோகன்ராஜ் - எஸ்டர் சந்தியா தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர் எஸ்டர் சந்தியா நீதிமன்றத்தில் விவாகரத்து குறித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். விவாகரத்து வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், காதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவரும் சோகத்தில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி மோகன்ராஜ் பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

இத்தகவலறிந்த மோகன்ராஜ் உறவினர்கள், அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த மோகன்ராஜ், நேற்று(ஜன.23) இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பூச்சிமருந்து அருந்தி கணவர் தற்கொலை

இதுகுறித்து காடாம்புலியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மோகன்ராஜ் கண்ணீர் மல்க பூச்சிமருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி காண்போரை சோகத்தில் ஆழ்த்துகிறது.

இதையும் படிங்க: விவசாய நிலத்தில் குடித்தவர்களைத் தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.