கடலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் பாமக வேட்பாளர் டாக்டர். கோவிந்தசாமியை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் விருத்தாசலத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் 'அதிமுக தலைமையிலான கூட்டணி இயல்பான கூட்டணி என்றும் திமுக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று குற்றம்சாட்டினார்.
மேலும் மதவாதத்தை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியால் ஒரு இஸ்லாமியரையோ, கிருத்துவரையோ தமிழக பாராளுமன்ற தேர்தலில் நிறுத்த முடியவில்லை என்று விமர்சித்தார்.
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டியது வாக்காளர்களின் கடமை.
ஜாதி, மதம், மொழி, இனம், இவற்றையெல்லாம் தாண்டி நாட்டின் வளர்ச்சியும் நலனும் தான் முக்கியம்.அதனடிப்படையில் தான் நாடு வளர்ச்சியடையும், முன்னேறும் என்பதில் மாற்றுகருத்து இல்லை.
நாட்டின் பாதுகாப்புக்கும்,வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கூட்டணி தான் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி' என்றார்.