சீர்காழி : கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடரும் கனமழை காரணமாக வெளியேற்றப்படும் நீர் மேட்டூரில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 6 நாட்களாக 100 டி.எம்.சி வரை தண்ணீர் பயனற்று கடலுக்கு சென்று கொண்டுள்ளது.
இதனால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளை தொட்டு வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் செல்லும் நீரின் அழுத்தத்தால் நாதல்படுகை கிராமத்தில் ஆற்று கரையின் மறுபக்கம் அமைந்துள்ள வீட்டின் கை பம்பில் அடிக்காமலே தண்ணீர் கொட்டுகிறது.
கைபம்பை அடித்தால் கூட முழு அளவு தண்ணீர் வராமல் இருந்த நிலையில், தற்போது கடந்த நான்கு நாட்களாக இடைவிடாமல் தண்ணீர் வந்த வண்ணமே உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.
இதையும் படிங்க : வைகை அணையில் இருந்து விநாடிக்கு 3ஆயிரம் கன அடி நீர் திறப்பு: விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!