கடலூர்: நெய்வேலி என்எல்சி சுரங்கம் இரண்டில், நாள்தோறும் பகல், இரவு நேரத்தில் MTC-என்ற நிலக்கரியை அணல் மின்நிலையத்தில் எடுத்துச் செல்லும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் 12.30 மணிக்கு MTC நிலக்கரி வெட்டி எடுத்து அனல்மின் நிலையத்திற்கு அனுப்பும் இயந்திரம் தீடிரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை தெரியாத புதிய ஆட்களை வைத்து பணி செய்வதால், இவ்விபத்து ஏற்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
என்எல்சியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இயந்திரம் முழுவதுமாக எரிந்து சேதமாகி விட்டது. இதனால் மாலை வரை 2-வது சுரங்கத்தில் ஒரு பகுதியில் நிலக்கரி வெட்டி அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திரைப்படமாகும் இசைஞானியின் வாழ்க்கை வரலாறு - ஹீரோ யார் தெரியுமா?