ETV Bharat / state

எஸ்.ஐ போல் நடித்து பணம் வசூல் செய்த துணை நடிகை கைது!

கடலூர்:  சிதம்பரத்தில் காவல் உதவி ஆய்வாளர் போல் நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகை சூரியப் பிரியாவை காவல் துறையினர் கைது செய்தனர்.

Fake police
author img

By

Published : Oct 31, 2019, 10:54 PM IST

சென்னை நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சூரியப்பிரியா (27). இவர் சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். கடந்த சில நாள்களுக்கு முன்பு சூரியப்பிரியா கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வந்து தனது தோழிகள் மூவரை சந்தித்துள்ளார். இதையடுத்து, அவர்கள் நான்கு பேரும் காவலர்கள் போல் வேடமிட்டு பணம் பறிக்க முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, சூரியப்பிரியா காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து சிதம்பரத்தில் பல்வேறு இடங்களில் பணம் வசூல் செய்துள்ளார். இதுகுறித்து சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தெரியவந்ததையடுத்து போலி வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நகரப் பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இன்று மாலை சூரியப்பிரியா காவல் உதவி ஆய்வாளர் வேடமிட்டு சிதம்பரத்தில் உலா வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கண்காணிப்புப் பணியிலிருந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சூர்யப்பிரியா, அவரது தோழிகள் மூன்று பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அதன்பின், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். சூரியப்பிரியா காவல் உதவி ஆய்வாளர் வேடமணிந்து எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பணம் வசூலித்தார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அரசு அலுவலர்கள் எனக் கூறி வியாபாரிகளிடம் வசூல் வேட்டை: இருவர் கைது!

Intro:கடலூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்த துணை நடிகை கைது
Body:கடலூர்
அக்டோபர் 31,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக நடித்து பணம் வசூலித்து வந்த துணை நடிகை சூரியப் பிரியா சிதம்பரம் நகர போலீசார் இன்று கைது செய்தனர்.

சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் சூரியப்பிரியா (27) இவர் சில திரைப் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு வந்து தனது தோழிகள் மூவரை சந்தித்துள்ளார். பின்னர் அவர்கள் போலீஸ் வேடம் அணிந்து பணம் பறிக்க முடிவு செய்தனர் அதனை தொடர்ந்து சூரியப்பிரியா சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து சிதம்பரத்தில் பல்வேறு இடங்களில் பணம் வசூல் செய்து உள்ளார்.

இத்தகவல் சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தெரியவந்ததை அடுத்து போலி வேடமிட்டு பொதுமக்களிடம் பணம் பறிக்கும் சூரியப்பிரியாவை பிடிக்க முடிவு செய்தனர் இதனைத்தொடர்ந்து போலீசார் சூரியப்பிரியாவை தீவிரமாக கண்காணித்தனர் அப்போது இன்று மாலை சூரியப்பிரியா சப் இன்ஸ்பெக்டர் வேடம் அணிந்து சிதம்பரத்தில் உலா வந்து கொண்டிருந்தார் அப்போது அங்கு மறைந்திருந்த சிதம்பரம் நகர போலீசார் சூர்யப்பிரியாவையும் மடக்கி பிடித்து கைது செய்தனர் பின்னர் அவர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சூரியப் பிரியாவுக்கு உதவியாக இருந்த அவரது தோழிகள் 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சூரிய பிரியா சப்-இன்ஸ்பெக்டர் போல் போலி வேடம் அணிந்து எந்தெந்த பகுதிகளில் பணம் எவ்வளவு வசூலித்தார். யார் யாரிடம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார். உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.