ETV Bharat / state

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

கடலூர்: வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பும், துணை ராணுவ படையினரின் கண்காணிப்பு இருக்கும் எனத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!
author img

By

Published : Apr 19, 2019, 11:18 PM IST

கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1470 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. வாக்குப்பதிவு நிறைவு செய்தபின் வாக்குப்பதிவு இயந்திரத்தை, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் காவல்துறை பாதுகாப்புடன் கடலூரில் உள்ள தேவனாம் பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரிக்குப் பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர், அன்புச்செல்வன் கட்சி நிர்வாகிகள் பார்வையின் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தனியறையில், அனைத்து வாக்கு பெட்டிகளையும் வைத்து சீல் வைத்தனர். அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்குத் துணை ராணுவம் சேர்த்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 24 மணி நேரம் கண்காணிக்கக்கூடிய வகையில், அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Intro:கடலூரில் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் துணை ராணுவம் கண்காணிப்பு

Body:கடலூர்
ஏப்ரல் 19,

17 வது மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்ற முடிந்தது இதனைத் தொடர்ந்து கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கடலூர் பண்ருட்டி நெய்வேலி குறிஞ்சிப்பாடி விருத்தாசலம் திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1470 வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வாக்குபதிவு நிறைவு செய்தபின் வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்தனர் பின்னர் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கடலூரில் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருந்து தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரிக்கு பாதுகாப்பாக கொண்டிருந்தனர்.

பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் கட்சி நிர்வாகிகள் பார்வையின் முன்னர் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள தனியறையில் அனைத்து வாக்கு பெட்டிகளையும் வைத்து சீல் வைத்தனர் அதன் பின்னர் வாக்கு எண்ணும் மையத்திற்கு துணை ராணுவம் மற்றும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரம் கண்காணிக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா மற்றும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனைவரும் இதைப் பார்க்கலாம் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.