கடலூர் ரவுடி வீரா கொலையில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிருஷ்ணாவின் தாயார் லட்சுமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், " கிருஷ்ணா உடலை தங்களது தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூராய்வு செய்வதோடு காணொலியாக பதிவு செய்ய வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். என்கவுன்ட்டரில் ஈடுபட்ட காவல் துறையினர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், கடலூர் ரவுடி வீரா கொலை வழக்கில் காவல்துறையால் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட கிருஷ்ணா வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கடலூர் என்கவுன்டர்: சம்பவ இடத்தில் காவல் துறை விசாரணை