ETV Bharat / state

கால்டாக்ஸி, மேக்ஸி கேப்  வாகனங்களை இயக்க அனுமதிக்ககோரி ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம் - ஓட்டுநர் தொழிற்சங்கம்

கடலூர்: தமிழ்நாடு முழுவதும் செல்ல அனுமதி அளிக்கக்கோரி ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று (ஆக. 20) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓட்டுநர் தொழிற்சங்கம்
ஓட்டுநர் தொழிற்சங்கம்
author img

By

Published : Aug 20, 2020, 4:38 PM IST

கால்டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாகனங்களை 100 விழுக்காடு பயணிகளுடன் இ-பாஸ் இன்றி தமிழ்நாடு முழுவதும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கடலூர் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று (ஆக.20) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, "ஊரடங்கு காலத்தில் இயங்காத வாகனத்திற்கு இரண்டு காலாண்டு வாகன சாலை வரியை அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத கால்டாக்ஸி, மேக்சி கேப் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் அனைவருக்கும் குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நிவாரண தொகையாக 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். வங்கி தவணையை செலுத்த மேலும் ஆறு மாத காலத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் உதயகுமார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் ஐந்து பேர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.