கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே வேட்டக்குடி கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தேங்கி நிற்கும் சாக்கடை நீர், குடிநீரில் கலந்துள்ளதாக்க தெரிகிறது.
இதனை அறியாத கிராம மக்கள், அதைக் குடித்ததால் 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், பேதி ஏற்பட்டு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.