கடலூர் மாவட்டம், மேல்புளியங்குடி கிராமத்தில் கடந்த 10 நாள்களாக ஆண் குரங்கு ஒன்று, பிறந்த சில நாட்களே ஆன நாய்க்குட்டியை தூக்கி வளர்த்து வருகிறது. தன்னுடைய கவனம் முழுவதையும் குட்டி நாயைக் கொஞ்சுவதில் மட்டுமே செலுத்தும் அந்த குரங்கிற்கு பால் தர இயலாத குறை மட்டும் தான்.
நாய்க்குட்டியை செல்லமாய் தூக்கி வைத்து, அங்கும் இங்கும் தாவும் குரங்கிடம், பொதுமக்களின் திட்டம் தோற்று போனது என்றே தான் சொல்லவேண்டும். குரங்கிடமிருந்து நாயைப் பிரிக்க பொதுமக்கள், பல தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்தனர்.
ஆனால், அவற்றை வாங்கி ருசித்து சாப்பிட்ட குரங்கு, அவர்களுக்கு ஏமாற்றத்தை மட்டும் தான் பரிசாகத் தந்தது. ஆண் குரங்கின் இந்த தாய்மை குணத்தைப் பார்த்து மக்கள் வியந்து போயுள்ளனர்.
பெற்ற பிள்ளையை குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி எதுவுமே நடந்திடாததுபோல், கடந்து செல்லும் இரக்கமற்ற தாய்களுக்கு இந்த குரங்கு சரியான பாடம் புகட்டியுள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: குரங்குக் குட்டியை பிள்ளைபோல் வளர்க்கும் காசாம்பூ பாட்டி!