கடலூரில் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா பாலம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு, திமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் ஏராளமான திமுகவினர், திராவிடர் கழகத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் திராவிட கழக துணை பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் சட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாநில அரசை கண்டித்தும் உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: தந்தை பெரியார் 46ஆவது நினைவு நாள்: ஸ்டாலின் மரியாதை!