கடலூர்: விருதாச்சலம் அடுத்த கார்மங்குடி ஊராட்சியிலிருந்து, மருங்கூர் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம்செய்யப்படுகிறது.
அப்பகுதியில் விவசாயம் செய்துவரும் பொதுமக்கள், மின்மோட்டார் மூலம் பாசனம் செய்துவருகின்றனர். இந்நிலையில் தற்போது மருங்கூர் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் குறுவை சாகுபடிக்கான நடவு நடும் பணியில் உழவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் மருங்கூரில் மின்மாற்றி (Transformer) ஐந்து முறைக்கு மேலாக பழுதடைந்து மாற்றப்பட்டுள்ளது. இதனால் உழவர்களில் விளைநிலம் சரியான நீர்ப்பாசனமின்றி காய்ந்து இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் உழவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு மின்சாரத் துறை நிர்வாகத்திடம், புதிய மின்மாற்றி அமைத்து உழவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
மேலும் இதே நிலை நீடித்தால் அனைவரும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்போவதாகவும் அப்பகுதி உழவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்!