கடலூர்: மாவட்டத்தில் நேற்றிரவு(பிப்.20) பெய்யத் தொடங்கிய கனமழை, தொடர்ந்து 10 மணி நேரம் கொட்டித் தீர்த்தது.
இதில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை 8 மணி வரை பெய்த மழைப்பதிவு 18 சென்டிமீட்டருக்கு மேல் பதிவாகியிருந்தது. இதுவரையில் 1930 பிப்ரவரி 9ஆம் தேதி 11.9 சென்டிமீட்டர் பெய்த மழையே, அதிகமான மழைப்பதிவாக இருந்தது.
என்னதான், மழை பெய்து வரலாற்றுச் சாதனை படைத்திருந்தாலும், சரியான வடிகால் மேலாண்மை இல்லாததால், சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில் சுரங்கப் பாதையை முற்றிலும் தண்ணீர் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: யானையை கொடூரமாகத் தாக்கும் பாகன் - பணியிடை நீக்கம் செய்த அரசு