ETV Bharat / state

திருமண அமைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை! - கடலூரில் திருமண அமைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்க்கக் கோரிக்கை

கடலூர்: ஊரடங்கு உத்தரவால் வரன் பார்த்து திருமணம் நடத்திவைக்கும் திருமண அமைப்பாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதால் தாங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை விடுத்த திருமண அமைப்பாளர்கள்
கோரிக்கை விடுத்த திருமண அமைப்பாளர்கள்
author img

By

Published : Apr 22, 2020, 12:26 PM IST

ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து திருமண நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளதால் திருமணத்தை சார்ந்துள்ள அனைத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதித்துள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், “வரன் பார்த்து திருமணம் நடத்தும் திருமண அமைப்பாளர்கள் தமிழ்நாட்டில் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். இந்த ஊரடங்கு உத்தரவால் திருமணம், ஜாதகம் என எதற்கும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் மிகவும் சிரமப்படுகின்றோம்.

திருமணத்தை நம்பியுள்ள எங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் வெளியில் சென்று ஏதாவது ஒரு வரனுக்கு ஜாதகம் காண்பித்து, அதில் வரும் வருமானத்தை வைத்து எங்களது வாழ்க்கையை நடத்தி வந்தோம்.

கோரிக்கை விடுத்த திருமண அமைப்பாளர்கள்

ஆனால் கரோனா வைரஸ் எதிரொலியாக ஊரடங்கு உத்தரவினால் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளோம். இதனால், தென்னிந்திய திருமண அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: குடும்ப அட்டைகளுக்கு ரூ. 5000 வழங்க வேண்டும் - விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.