கடலூர்: கடலூர் அருகே எம்.புதூரில் உள்ள நாட்டு பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று (ஜூன் 23) திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத வேளையில் பலத்த சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நாட்டு பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். பெண் உள்ளிட்ட இருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சி.என் பாளையம் கிராமத்தை சேர்ந்த சத்யரஜ் (34), நெல்லிகுப்பத்தை சேர்ந்த அம்பிகா (50), பெரியகாரைகாடு கிராமத்தை சேர்ந்த சித்திரா (35) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து