ETV Bharat / state

அரசு திட்டங்களில் நிதி முறைகேடு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

author img

By

Published : Feb 25, 2020, 3:14 PM IST

கடலூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கை மனுவாக அளித்தனர்.

financial issue at cuddalore
cuddalore financial issue collector meeting

கடலூர் மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். அதன்படி நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் குறைதீர் கூட்டத்தில் கடலூர், விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம், குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை கோரிக்கை மனுவாக அளித்தனர்.

இந்நிலையில் பண்ருட்டி, அக்கடவல்லி கிராம மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியதாவது, 'தனிநபர் கழிவறை முறைகேடு, மரக்கன்று நடுவதில் முறைகேடு, மோட்டார் சரி செய்வதில் முறைகேடு, தேசிய ஊரக வேலை வாய்ப்பில் பல லட்சத்திற்கும் மேல் முறைகேடு எனப் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

நிதி முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

இதனை தணிக்கை செய்து சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க: அனுமதியின்றி இயங்கிய தண்ணீர் ஆலைக்கு சீல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.