கடலூர் சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் 103ஆவது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி கடலூரில் உள்ள மணிமண்டபத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ராமசாமி படையாட்சியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், அரசியல் பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு ராமசாமி படையாட்சியாருக்கு மரியாதை செலுத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ஹார்வர்டு பல்கலை. தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம் வழங்கிய தமிழ் உணர்வாளர் ராமசாமி மரணம்!