ETV Bharat / state

கடலூர் மாவட்ட எல்லைகள் மூடல்: இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி!

author img

By

Published : Jun 25, 2020, 1:52 PM IST

கடலூர்: மாவட்ட எல்லைகள் மூடப்பட்டதால், இ-பாஸ் இருந்தால் மட்டுமே புதுவை வழியாக இருந்தாலும் சரி, பிற எல்லைகள் வழியாக இருந்தாலும் சரி மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட எல்லைகள் மூடல்
கடலூர் மாவட்ட எல்லைகள் மூடல்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாவட்ட ஆட்சியர்கள் உடனான முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள மண்டல பொது போக்குவரத்து முறையை ரத்து செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் அவசியம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட எல்லைகளான கடலூர்-புதுவை, விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 56 எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

புதுவை - கடலூர் எல்லைப்பகுதியான பெரியகங்கனாகுப்பம் பகுதியில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அத்தியாவசிய தேவைகள், மருத்துவ உதவி போன்றவற்றுக்கு செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

புதுவையில் இருந்து, கடலூர் மாவட்டத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வரும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மேலும், சென்னையில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் இன்று மட்டும் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.