தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பதிவாகும் வாக்குகள், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் வைத்து எண்ணப்படுகின்றன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் வாக்கு எந்திரங்கள் வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு 'நூறு சதவீதம் வாக்கு! அதுவே நமது இலக்கு!' என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்புச்செல்வன் வழங்கினார்