இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறியதாவது, “கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. கடலூரில் ஆரம்பத்தில் 26 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட், பிற மாநிலங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்கள் கண்டறியப்பட்டு 10 சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டதில் மொத்தம் 699 பேரைக் கண்டறிந்துள்ளோம். பின்னர் அவர்கள் அனைவரையும் சோதனை செய்ததில் 160 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 129 பேர் கோயம்பேட்டிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மாவட்டத்தில் கடைகளைத் திறப்பது பற்றி முதலமைச்சர் ஒரு தெளிவான அறிக்கையை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையின் மூலம் யார் யாரெல்லாம் கடையை திறக்க அனுமதிக்க படுகிறார்களோ அவர்களெல்லாம் இன்று கடையைத் திறந்து உள்ளார்கள். எனவே அவர்கள் கடையை திறக்க எந்த தடையும் இல்லை. எந்தத் தேவையோ அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு எண் 1077 தொடர்பு கொள்ள வேண்டும். கடலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளன. அதனால் கடலூர் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?