ETV Bharat / state

இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடி.. ரூ.80 லட்சம் அபேஸ் செய்த தம்பதி கைது! - Fraud by claiming double payment

Cuddalore couple Money fraudulent :தன்னிடம் பணம் கொடுத்தால் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ. 80 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.80 லட்சம் அபேஸ் செய்த தம்பதி கைது!
ரூ.80 லட்சம் அபேஸ் செய்த தம்பதி கைது!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 4, 2023, 11:18 AM IST

கடலூர் : திட்டக்குடி வைத்தியநாதபுரத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். விவசாயியான இவருக்கு அதே ஊரை சேர்ந்த ஐயம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்டம் ரோஸ்நகர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (55) என்பவர் கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அந்த ஊரில் உள்ள பலருக்கும் ரவிச்சந்திரன் நன்கு தெரிந்தவர் எனக் கூறப்படும் நிலையில், அனைவரிடமும், தான் பெரிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக அவர் தெரிவித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. பொது மக்கள் பலரிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் செய்து வருவதாகவும், அந்த தொழிலில் நல்ல லாபம் கிடைப்பதாகவும் ரவிச்சந்திரன் ஆசை வார்த்தை கூறி வந்ததாக கூறப்படுகிற்து.

மேலும், தான் பணியாற்றும் நிறுவனத்தில் முதலீடு செய்ய மேலும் பணம் தேவைப்படுவதாகவும், நீங்கள் முதலீடு செய்தால், அந்த பணத்தை 6 மாதத்தில் இரட்டிப்பாக தருவேன் என்று ரவிச்சந்திரன் கூறியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இரட்டிப்பாக தரும் போது, அவருக்கு 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதை நம்பி சுந்தர்ராஜன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி ராமநத்தத்தில் வைத்து ரவிச்சந்திரன், அவரது மனைவி கற்பகம் (வயது 47) ஆகிய 2 பேரிடமும் நேரடியாகவும், வங்கி கணக்கு மூலமாகவும் மொத்தம் 20 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதேபோல் ராமநத்தம் ஐயம்பெருமாளிடம் ரூ.10 லட்சம், தச்சூரை சேர்ந்த சீதாராமனிடம் ரூ.20 லட்சத்து 37 ஆயிரத்து 900, ராமநத்தம் ராஜூ கண்ணனிடம் ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்து 37 ஆயிரத்து 900 பணத்தை ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் 6 மாதம் கடந்த போதும் பணத்தை தராமல் ரவிச்சந்திரன் தம்பதி இழுத்தடித்து வந்ததாகவும், பின்னாட்களில் தம்பதியினர் நம்பிக்கை மோசடி செய்தது தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 4 பேர் கொண்ட கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக பாபி சிம்ஹா போலீசில் புகார்.. கொடைக்கானலில் நடந்தது என்ன?

இந்த தம்பதியினர் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்து உள்ளனர். மனுவை பெற்ற காவல் கண்கானிப்பாளர் ராஜாராம், இது பற்றி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரவிச்சந்திரன் மற்றும் வீட்டில் இருந்த அவரது மனைவி கற்பகம் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் மோசடி செய்ததை ஏற்றுக்கொண்டனர். பணத்தை குடும்ப செலவுக்காகவும், ஆடம்பரமாக செலவுகளுக்காகவும் பயன்படுத்தியதாக இருவரும் தெரிவித்ததாக போலீசார் கூறி உள்ளனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்த நிலையில் அவர்களிடம் இருந்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் திட்டக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருப்பூரில் வீட்டின் அருகே மது அருந்தியதை தட்டிக்கேட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.