இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்குதல் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருகிறது. கொரோனா தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100-க்கும் மேல் உயர்ந்துள்ளதால், மத்திய அரசு அதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்ததோடு வெளி மாநிலங்களுக்குச் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் கடலூர் மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனுக்களை அளித்துவருகின்றனர்.
மனு கொடுக்கவரும் மக்களிடம் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வும், கிருமிநாசினி கொடுத்தும் பொதுமக்களுக்கு கை கழுவுதல் உள்ளிட்ட துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், அங்குவரும் அனைத்து பொதுமக்களுக்கும், வாகனங்களுக்கும் கிருமி நாசினியை தெளித்த பின்னரே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:'சி.ஏ.ஏ. குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்' - ஸ்டாலின்