தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 9) புதியதாக 5, 994 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2, 96, 901ஆக அதிகரித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஆகஸ்ட் 8) வரை கரோனா தொற்றால் 4 ஆயிரத்து 663 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மேலும் 146 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 779ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று வரை 2,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மேலும் 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.