நீலகிரி மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை அரசு பேருந்துகள், வணிக நிறுவனங்கள் ஆகிய இடங்களில் வாங்க மறுக்கப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பொதுமக்களிடம் பத்து ரூபாய் நாணயங்கள் ஏராளமாக தேங்கிக் கிடக்கின்றன, இந்த பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிகளில் திரும்பப் பெற வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அதில் சங்கத் தலைவர் மனோகரன், செயலாளர் சபாபதி, பொருளாளர் ஆல்தொரை, நிர்வாகிகள் ரமணி லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதற்கு தீர்வு காணும் வகையில் அம்மாவட்ட முன்னோடி வங்கி இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் படிக்க: அனைத்து நாணயங்களும் செல்லும்; ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு!