ETV Bharat / state

வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போனிற்கு தடை- மாவட்ட தேர்தல் அலுவலர் - செல்போனிற்கு தடை

கடலூர்: வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலர்
author img

By

Published : May 15, 2019, 9:46 AM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புசெல்வன் தலைமையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி 210இல் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், அரசியல் கட்சிகள் பரப்புரை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Intro:வாக்கு எண்ணும் மைய வளாகத்தினுள் செல்போன் எடுத்துச் செல்ல தடை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

Body:கடலூர்
மே 14,

வாக்கு எண்ணிக்கை மையம் வளாகத்தினுள் செல்போன் எடுத்து செல்ல தடை என கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட்ட தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன் கடலூர் சார் ஆட்சியர் சரயு விருதாச்சலம் சார் ஆட்சியர் திரு பிரசாத் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் அளித்த பேட்டியில்; வருகிற மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் மொத்தம் 21 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவதிகையில் வாக்குச்சாவடி எண் 210 நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டு வருகிற 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது இங்குள்ள வாக்காளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உள்ளாட்சி அலுவலகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது மேலும் தண்டோரா மற்றும் ஆட்டோ விளம்பரம் மூலம் மறு வாக்குப்பதிவு குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மேலும் வேட்பாளர்கள் இந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை. இந்திய தேர்தல் ஆணையம் பிரச்சாரம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட பின்பு இது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.