கடலூர்: கடந்த ஆறு நாள்களாக பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ள நீர் சுழ்ந்துள்ளது. மேலும், விவசாய நிலத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது.
கடலூரில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ. 12) பார்வையிட்டார். குறிஞ்சிப்பாடி அடுத்த ராஜாகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
நிவாரணம் வழங்கிய ஸ்டாலின்
இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள 18 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, ஐந்து கிலோ மளிகை பொருள்கள், வேட்டி, சேலை, பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருள்களை வழங்கினார்.
மேலும், அக்குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். பின்னர் சாலையில் காத்திருந்த மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார்.
கடலூர் மாவட்டத்தில் 550 ஹெக்டர் விவசாய நிலம் நீரில் முழ்கியுள்ளது. குறிஞ்ப்சிபாடி அடுத்த ஆடூர் அகரம் கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முதலமைச்சர் பார்வையிட்டார். அங்கு இடிந்து விழுந்த ஐந்து வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.
இதையும் படிங்க: தார் டூ டொயோட்டா பிராடோ - விதவிதமான கார்களில் செல்லும் முதலமைச்சர்