ETV Bharat / state

ஸ்டாலினின் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பரப்புரை! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கடலூர்: அதிமுக ஆட்சியை அகற்ற திமுக தலைவர் ஸ்டாலின் பல போராட்டங்களை நடத்தினார் என்றும், அவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Mar 30, 2019, 2:05 PM IST

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து சேத்தியாத்தோப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நான் முதல்வராகப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை நடத்தி ஆட்சியை அகற்ற திட்டம் தீட்டினார். ஆனால், அத்தனை போராட்டங்களையும் அரசு முறியடித்துள்ளது. எந்த சக்தியாலும் அதிமுக அரசை எதுவும் செய்ய முடியாது.

மேலும், கடலூர் மாவட்டத்தில் பருவகாலங்களில் பெய்யும் மழை நீரைத் தேக்கி பயன்படுத்த தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.400 கோடி மதிப்பில் கதவணைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது எனவும் அவர் பேசினார்.

Intro:சேத்தியாத்தோப்பில் அதிமுக வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து வெள்ளிக்கிழமை இரவு பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி

Body:கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை பொ.சந்திரசேகரை ஆதரித்து சேத்தியாதோப்பு கடைத்தெருவில் திறந்த வேனில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது

பெரம்பலூர் மாவட்டத்தில் திமுகவினர் அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களை தாக்கினார் சென்னையில் பிரியாணி கடையில் புகுந்து தாக்கினர் அந்த கடைக்கு ஸ்டாலின் சென்று சமரசம் பேசினார் நான் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் மு க ஸ்டாலின் பல்வேறு போராட்டங்களை தூண்டினார் அத்தனை போராட்டங்களும் அரசு முறியடித்தது

அதிமுக ஆட்சி ஒன்றும் நடைபெறவில்லை என மு க ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் அதிக அளவில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன குறிப்பாக தமிழகம் முழுவதும் கொடிமரத்துக்கு செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டது இதில் ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டது இதன்படி 3000 குளங்கள் தூர் வரப்பட்டன

இதேபோல பருவகாலங்களில் பெய்யும் மழை நீரை தேக்கி பயன்படுத்த தடுப்பணைகள் கட்டப்படும் இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் ரூபாய் 60 ஆயிரம் கோடியில் கோதாவரி காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் எனது லட்சியத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டத்தை செயல் படுத்தப்படும்

கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூபாய் 400 கோடி கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது பெரம்பலூர் அருகே ரூபாய் 19 கோடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது மேலும் புவனகிரி வரலாற்றில் கடல்நீர் உள்பகுதியை தடுக்க கதவணை அமைக்கப்படும் வெள்ளாற்றின் மொத்தம் ஆறு தடுப்பணை அமைக்கப்படும் என்எல்சி மூன்றாவது சுரங்கம் நிலம் கையகப் படுத்தப் படுவதால் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்பதால் மாற்று ஏற்பாடு செய்யப்படும்

கூட்டத்தில் கடலூர் மாவட்ட அதிமுக செயலாளர் ஏ அருண்மொழிதேவன் எம்பி சந்திரகாசி எம் பி முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே எஸ் பாண்டியன் நாகா முருகுமாறன் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் முனைவர் அசோக்குமார் மாவட்ட செயலாளர் டாக்டர் இ.கே.சுரேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.