பயிற்சி மருத்துவர்கள் போராட்டம் - cuddalore
சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி பயிற்சி மருத்துவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி, பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.
இந்தக் கல்லூரி தற்போது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இங்கு பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு மாத உதவி தொகையாக ரூபாய் முன்றாயிரம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக இந்தத் தொகையும் முறையாக கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை என மருத்துவ மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மற்ற அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை போல, தங்களுக்கும் வழங்க கோரி கடந்த இரு நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று (ஜூலை 25) மூன்றாவது நாள், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் டாக்டர் ரவிந்திரநாத் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
மற்ற மருத்துவக் கல்லூரி பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைப் போல இவர்களுக்கும் வழங்க வேண்டும். நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாதாந்திர ஊதியத்தை உயர்த்தி தர கோரிக்கை: பயிற்சி மருத்துவர்கள் நூதன போராட்டம்