கடலூரில் இயங்கிவரும் முந்திரி தொழிற்சாலையானது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவருகின்றது. இதனால் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அதனை அகற்றக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
பண்ருட்டி நகராட்சிக்குள்பட்ட ராஜேஸ்வரி நகரில் மிகப்பெரிய முந்திரி தொழிற்சாலை முறையற்ற அனுமதியால் இயங்கிக் கொண்டிருக்கின்றது. மேலும் இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையால் காற்று மாசுபாடும், நிலத்தடி நீரும் பாதிப்புக்குள்ளாகிறது.
இதனால், தொழிற்சாலை கட்ட ஆயத்தப் பணி நடைபெற்ற நேரத்திலிருந்து இந்தத் தொழிற்சாலையை இங்கிருந்து அகற்ற பல மனுக்கள் அளித்துள்ளோம்.
ஆனால், இதுவரை அலுவலர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, முந்திரி தொழிற்சாலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையும் படிங்க : மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கக்கோரி போராட்டம்