கடலூரில் நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு சங்கத் தலைவர் பாண்டியன் தலைமைதாங்கினார்.
இதில், நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தங்களுக்கு விரைவில் முறையான சம்பளம் வழங்கக் கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.