ETV Bharat / state

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200ஆவது அவதார தினம் - பிறந்த ஊரில் சிறப்பாக நடந்த வழிபாடு - அவதார தின வழிபாடுகள்

வள்ளலாரின் 200ஆவது அவதார தினத்தை முன்னிட்டு வள்ளலார் அவதார இல்லத்தில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் 200 வது அவதார தின வழிபாடுகள்...

author img

By

Published : Oct 5, 2022, 4:11 PM IST

கடலூர்: புவனகிரி அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலாரின் அவதார இல்லம் அமைந்துள்ளது. இன்று வள்ளலாரின் 200ஆவது அவதார தினத்தை முன்னிட்டு மருதூரில் அவதார இல்லத்தில் காலையில் சன்மார்க்கக்கொடி ஏற்றப்பட்டு வழிபாடு நடந்தது. ஆன்மிக அன்பர்கள் பெருந்திரளானவர்கள் இதில் பங்கேற்றனர்.

அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்னும் முழக்கத்துடன் அணையாதீபத்தின் முன்பு இருந்து, ஊர்வலமாக புறப்பட்டு சன்மார்க்க கொடியேற்றும் இடத்திற்கு சன்மார்க்க அன்பர்கள் வருகை தந்தனர். அங்கு ஏற்கெனவே இருந்த பழைய கொடியை அகற்றிவிட்டு, புத்தம்புதிய மஞ்சள் வெள்ளை நிறத்துடன் கூடிய சன்மார்க்கக் கொடியை ஏற்றி, கொடி பாராயணம் பாடி, சன்மார்க்க அன்பர்கள் மலர்த்தூவி சன்மார்க்க கொடியேற்றினர்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் 200ஆவது அவதார தினம் - பிறந்த ஊரில் சிறப்பாக நடந்த வழிபாடு

இதனையடுத்து வள்ளலார் அவதார இல்லத்தில் தொட்டிலில் மழலை வடிவாய் வள்ளலார் திருவுருவத்திற்கு மலர்த் தூவி தீபம் காட்டி, வழிபாடு நடைபெற்றது. இதில் உலகெங்கிலும் உள்ள ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர். தொடர்ந்து இடைவிடாது அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.