ETV Bharat / state

என்எல்சியில் ஏற்பட்ட விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் - கே.எஸ். அழகிரி பேட்டி - என்எல்சியில் ஏற்பட்ட விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்

கடலூர்: நெய்வேலி என்எல்சியில் ஏற்பட்ட விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Accident at NLC reason for the negligence of the authorities

author img

By

Published : Jul 6, 2020, 9:49 PM IST

கடலூரில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கட்சி நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசைப் பொறுத்தவரை ஒரு தெளிவான நிலை அவர்களுக்கு கிடையாது. சீனாவில் தொற்று ஏற்பட்ட 15 நாள்களில் 10 ஆயிரம் படுக்கைகள் செய்து விட்டார்கள். நம்முடைய அரசாலும் ஏராளமான படுக்கைகளை செய்திருக்க முடியும். ஆனால் அரசாங்கம் அதற்கு போதிய கவனம் செலுத்தவில்லை.

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடைபெற்ற மோதல் துரதிர்ஷ்டமானது. ஆனால் அதைவிட மோசமான விஷயம் பிரதமர் மோடி இதுவரைக்கும் அதுகுறித்து தெளிவான விளக்கம் தரவில்லை. ராணுவ வீரர்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்று விவரம் கேட்டால் தேசத்தின் மீது உங்களுக்கு பக்தி இல்லை என்று கூறுகிறார்கள்.

Accident at NLC reason for the negligence of the authorities

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சமீபகாலமாக விபத்துகள் நிகழ்கின்றன. நெய்வேலி நிர்வாகம் பாதுகாப்பு விஷயத்தில் கடந்த காலத்தைப் போல இப்போதும் உள்ளது. என்எல்சியில் ஏற்பட்ட விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். ஆகவே நெய்வேலி நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம்: சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.