கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில் அடுத்து 47.5 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரி நிரம்பியது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 45.5 அடியாக உள்ளது.
மேலும் ஏரிக்கு அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஓடைகள் வழியாக வினாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வருகிறது.
இந்நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி 2000 கனஅடி நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள்!