ETV Bharat / state

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்த பத்தாம் வகுப்பு மாணவன்! - Cuddalore district

கடலூர்: பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற மாணவன் முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி கூறியபடி, சுவரொட்டி படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

10th class student who posted a poster on social media thanking the Chief Minister

author img

By

Published : Aug 12, 2020, 1:00 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பள்ளி கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து நேற்று முன் தினம்(ஆகஸ்ட் 10) 10ஆம் வகுப்பு தேர்ச்சி விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குருங்குடி பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவர் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியில் சுவரொட்டி படம் ஒன்றை வடிவமைத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், ’பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்றுச் சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும், என்னைப் பார்த்து ஏளனமாக சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நன்றி, நன்றி, நன்றி என இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி புகைப்படத்தை வைத்து, சுவரொட்டிக்கான படத்தை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிகழ்வு பொதுமக்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.