கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த மக்கினம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள் ஊர் எல்லையில் கிரிக்கெட் விளையாடுவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், அப்பகுதிக்கு விரைந்த காவல் துறையினர், ட்ரோனா கேமராவை கிரிக்கெட் விளையாடும் இடம் அருகில் பறக்கவிட்டனர்.
ட்ரோனை பார்த்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், சிதறி அடித்து செருப்பை கையில் எடுத்தவாறு ஓட்டம் பிடித்தனர். ஆனால், இறுதியில் முட்புதரை தாண்ட முடியாமல் இளைஞர்கள் சிக்கித் தவித்தனர்.
அப்போது, காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலமாக, தப்பிக்க முயன்றால் வீடு தேடி வருவோம் என எச்சரித்தையடுத்து, அவர்களே வரிசையாக வந்து காவல் துறையிடம் சரணடைந்தனர்.
பின்னர், காவல் ஆய்வாளர் மகேந்திரன், இளைஞர்களை தகுந்த இடைவெளியை பின்பற்றி நிற்க வைத்து அறிவுரைகளை வழங்கினார். மேலும், விலகி இரு, விழித்திரு, வீட்டில் இரு என்ற வாசகத்தை உறுதிமொழி ஏற்க வைத்த பின்னர்தான் கலைந்து செல்ல அனுமதித்தார்.
இதையும் படிங்க: பெண்களின் தனிமையை பணமாக மாற்றிய குமரி இளைஞர் கைது!