இதுகுறித்து யங் இந்தியன் ஃபவுண்டேஷன் மேலாளர் விஷ்ணு பிரபு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி சுஜித்தின் இறப்பின் தாக்கமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.
எனவே பயன்பாடற்ற மூடபடாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் எங்களை தொடர்பு கொண்டால், அந்த ஆழ்துளைக் கிணறுகளை இலவசமாக மூடுவோம். மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், தங்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் அவர் அளித்தார். ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய யங் இந்தியன் பவுண்டேசன் கைப்பேசி எண்: 9150226634.
கடந்த 25ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று திருச்சி நடுக்காட்டுபட்டியில் சுஜித் வில்சன் என்ற குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழந்து நான்கு நாட்களாக போராடி இறந்த நிலையில் மீட்டனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பயனற்ற மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை அரசு அலுவலர்கள் மூடி வருகின்றனர்.
அந்த வகையில் யங் இந்தியா பவுண்டேசனும் ஆழ்துளை கிணறுகளை மூடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆபத்தான ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவலுக்கு ரூ.1,000 பரிசு!