உலக தர தினம் நவம்பர் 14ஆம் தேதி (நேற்று) உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. உலக சர்க்கரை நோய் தினமும் அதே நாளில்தான் அனுசரிக்கப்பட்டது. அதன் ஒரு நிகழ்வாக கோவை அரசு மருத்துவமனையில் சர்க்கரை நோய் விழிப்புணர்வு ஊர்வலம் நீரிழிவு நோய் துறை சார்பாக நடத்தப்பட்டது.
இதில் சுமார் 200 மாணவர்கள் கலந்துகொண்டனர். ஊர்வலத்தை கோவை அரசு மருத்துவமனை முதல்வர் அசோகன் தொடங்கிவைத்தார். இதில் சர்க்கரை நோய்க்கு அக்கறை தேவை, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைப்போம் போன்ற பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் சென்றனர்.
இந்த நிகழ்வில் பேசிய மருத்துவமனை முதல்வர் அசோகன், "தற்போது உள்ள வாழ்க்கைச் சூழலில் சிரமம் இல்லாமல் அனைத்து வேலைகளையும் செய்வதால்தான் சர்க்கரை நோய், கொழுப்பு சம்பந்தமான உபாதைகள் வருகிறது.
இதைத் தவிர்க்க அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்ட வேலை சூழலுக்கு மாற வேண்டும். குழந்தைகள் அனைவரும் வெளியில் வந்து விளையாட வேண்டும். வீட்டினுள்ளே விளையாடிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிக்க: உலக தர தின விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்..!