ETV Bharat / state

10 ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கும் கணவன்! விடுதலை செய்யக்கோரி ஸ்டிரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி

கணவர் சிறைக்கு சென்ற பின்னர் தனக்கு உடல் நிலை சரி இல்லாமல் படுத்த படுக்கையாக இருப்பதாகவும்,குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன்னுடைய கணவணை விடுதலை செய்யக்கோரி மனைவி மனு அளித்து உள்ளார்.

10 ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கும் கணவன்! விடுதலை செய்யக்கோரி ஸ்டிரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி
10 ஆண்டுகளாக விசாரணை கைதியாக இருக்கும் கணவன்! விடுதலை செய்யக்கோரி ஸ்டிரெச்சரில் வந்து மனு அளித்த மனைவி
author img

By

Published : Jun 26, 2023, 3:15 PM IST

கோயம்புத்தூர்: கரும்புக்கடை பகுதியில் வசிப்பவர் பாத்திமா.இவரது கை மற்றும் கால்கள் செயல் இழந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரது கணவர் சுலைமான், 10 ஆண்டுகள் முன் குண்டுவெடிப்பு வழக்கு ஒன்றில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

10 வருடங்கள் கடந்தும் தனது கணவரை விசாரணை கைதியாக வைத்துள்ளதாகவும், தன்னுடைய கணவர் வழக்கில் எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை நெடுநாட்களாக சிறையில் வைத்திருப்பதாகவும், வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் அல்லது சுலைமானுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாத்திமா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்ட்ரெச்சரில் வந்து மனு அளித்தார்.

இது குறித்து பாத்திமா கூறுகையில், தனது கணவர் சுலைமான் மீது வழக்கு பதிவு செய்யாமலேயே கடந்த பத்து வருடமாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். கோவையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று அழைத்துச் செல்லப்பட்டவரை இதுவரை வெளியில் விடாமல், வழக்கும் நடத்தாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறினார்.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும் - எடப்பாடி பழனிசாமி

தன் கணவர் சிறைக்கு சென்ற பின் தான் மன உளைச்சல் அடைந்து உடல் நிலை மோசமாகி படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தெரிவித்தார். தன்னை என்னுடைய அம்மா மற்றும் அக்கா தான் பார்த்துக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டார். தனக்கு 4 குழந்தைகள் உள்ளது எனவும் அவர்கள் கல்வி பாதிக்கப்பட்டு உள்ளதாக் கூறினார்.

10 ஆண்டுகளாக தனியாக இருந்து என்ன செய்வது எனத் தெரியாமல் இருந்துவிட்டதாகவும், தன்னையும், குழந்தைகளை கவனிக்க தனது கணவரை குறைந்தபட்சம் ஜாமீன் கொடுத்தாவது வெளியே அனுப்ப வேண்டும் என்று பாத்திமா வலியுறுத்தினார். தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு, அவர்களின் வருங்காலம் குறித்து தனக்கு கவலை அளிப்பதாக கூறினார்.

விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவரை 10 ஆண்டுகளாக விடுதலை செய்யப்படவில்லை என்றும் வழக்கை விரைவாக நடத்தி கணவரை விடுதலை அல்லது ஜாமீனில் விட வேண்டும் என்று வலியுறுத்தி உடல் நிலை பாதிக்கப்பட்ட பாத்திமா ஸ்டிரெச்சரில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆதரவாளர் ரூ.13.5 கோடி முறைகேடு... வருமான வரித்துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.