ETV Bharat / state

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பெண்: செவிலி மீது உறவினர்கள் தாக்குதல்!

கோவை: சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த விவகாரம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் மீது தாக்குதல் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

மருத்துவர்கள் மீது தாக்குதல்
author img

By

Published : Jul 3, 2019, 2:57 PM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு ருக்மணி என்ற பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ருக்மணி அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், இவரின் மரணத்திற்கு அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் எனவும், சரியான ருக்மணிக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை எனவும் கூறி மருத்துவமனைக்குள் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை அடித்து சேதப்படுத்தியதோடு பணியில் இருந்த மருத்துவர் லட்சுமண குமார், செவிலி மகாலட்சுமி, ஊழியர் குமாரசாமி ஆகியோரைத் தாக்கினர்.

மேலும், மருத்துவமனையின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலி தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற வழியின்றி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து காவல் துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சை பலனின்றி இறந்த பெண்

தாங்கள் தாக்கப்பட்டது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சேரலாதன் உரிய முறையில் ஆதாரங்களோடு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டும் மருத்துவமனை ஊழியர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், உடனடியாக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும், மருத்துவமனை வளாகத்திற்குள் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர், செவிலி மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Intro:சிகிச்சை பலனின்றி பெண் உயிரிழந்த விவகாரம் – மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் மீது தாக்குதல் – தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்.Body:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு ருக்மணி என்ற பெண் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் ருக்மணி கொண்டு செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ருக்மணி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம், சரியான சிகிச்சை ருக்மணிக்கு வழங்கப்படவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனைக்குள் ரகளையில் ஈடுபட்டனர். அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை சேதப்படுத்தியதோடு பணியில் இருந்த மருத்துவர் லட்சுமண குமார், செவிலியர் மகாலட்சுமி மற்றும் ஊழியர் குமாரசாமி ஆகியோரை தாக்கினர். மேலும் மருத்துவமனையின் முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இன்று காலை முதல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனால் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற வழியின்றி கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். தாங்கள் தாக்கப்பட்டது குறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சேரலாதன் உரிய முறையில் ஆதாரங்களோடு மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டும் மருத்துவமனை ஊழியர்கள், தங்களுக்கு உரிய பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகவும், உடனடியாக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மருத்துவமனை வளாகத்திற்குள் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மருத்துவர் மற்றும் செவிலியர் மீது தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.