கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் வீட்டிலிருந்த இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என நான்கு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்க்கொண்டனர்.
இதில், அஜித் மோன், அவரது மனைவி புனிதா, மஹண்ட்ஷா, ஆயிஷா என தெரியவந்தது. மேலும் அவர்கள் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பின் பெண்கள் இருவரை அரசு மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின் ஆயிஷாவை காவல் துறையினர் விசாரித்தபோது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் இல்லாமல் கொல்கத்தா வழியாக பெங்களூரு சென்றுள்ளார். அங்கு மூன்று மாதங்கள் தங்கிஇருந்தையடுத்து ஆசிக், ரபீக் ஆகியோர் மூலம் கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் உள்ள லட்சுமி என்பவர் வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ரபீக் சரவணம்பட்டி பகுதியில் வசித்துவரும் அஜித்மோகன், புனிதா, மஹண்ட்ஷா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மூவரும் ஆயிஷாவை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆயிஷா வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பதற்கான குடியுரிமை அட்டையை வைத்திருப்பினும் பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்புத்தூர் காவல் ஆணையருக்கும் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (ஜூன்.18) காலை ஆயிஷா சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சென்னை புழல் சிறையில் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் காவல்துறையினர் அடைத்தனர். மேலும் ஆசிக், ரபீக்கை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.