ETV Bharat / state

சூலூர் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சீல் - sulur consituency

கோவை: சூலூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு  இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு, அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு சென்று சீல் வைக்கப்பட்டது.
author img

By

Published : May 20, 2019, 1:54 PM IST

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தம் 324 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தமுள்ள இரண்டு லட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்களில், இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். அதில் 79.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 75.60 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 3.81 விழுக்காடு வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளன. சூலூர் தொகுதி வாக்குப்பதிவு முடிந்து இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பேட் ஆகியவை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான கோவை - தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைத்தார். வருகின்ற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் துணை பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

சு.சீனிவாசன்.    கோவை

சூலூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் வைக்கப்பட்டு அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது..

சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 22 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், அதிமுக வேட்பாளர் கந்தசாமி மற்றும் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று சூலூர் இடைத்தேர்தல் 324 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் 79.41 சதவீத வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 2 இலட்சத்து 95 ஆயிரத்து 158 வாக்காளர்களில், 2 இலட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 75.60 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 3.81 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகியுள்ளது. 
இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவி பேட் ஆகியவை சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான கோவை - தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. இன்று அதிகாலை வரை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், கடைசி வாக்குப்பதிவு இயந்திரம் அதிகாலை 4.45 மணியளவில் வந்து சேர்ந்தது. இதைதொடர்ந்து காலை  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறையில் வைக்கப்பட்டன. சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் வைப்பு அறைக்கு சீல் வைத்தார். துணை இராணுவ படையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற மே 23 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.